
உடன்பிறப்பு
என்றும் பலர் முன் சொன்னது இல்லை,
என் வலியை
சுமந்து கண்ணீர் - விட்டான்,
எதிர்பார்க்கவில்லை,
அவன் என் பக்கம் என்று
நான் தோல்வி
அடைவேன், அவன் வெற்றியடைய
எனக்காக காத்து இருப்பான் பசியோடு வீட்டில்
அப்பாவின் அரவணைப்பு
அவனிடம் இருக்கும்
தாயின் பாசம்
அவனுக்கு கைவந்த கலை.
அதிகம் பேசவில்லை, ஆனால் எனக்கு துணை அவன்.
என் அண்ணன், என் படை தளபதி, இன்றுவரை.
கவிதை...


No comments:
Post a Comment